சென்னை திருமழிசையில் இயங்கி வரும் காய்கறி சந்தை சங்க செப்டம்பர் மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படும் என கோயம்பேடு அனைத்து காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.
கொரோனா நோய் தொற்று காலத்தில் கோயம்பேடு சந்தையில் அதிக அளவில் மக்கள் கூட்டம் கூடியதால் நோய் தொற்று பரவ அதிகரித்தது. இதையடுத்து நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டது. அங்கிருந்த கடைகள் அனைத்தும்
திருமழிசைக்கு மாற்றப்பட்டது. திருமழிசையில் கடந்த சில மாதங்களாக காய்கறி சந்தை செயல்பட்டு வந்தது. இந்நிலையில் மீண்டும் கோயம்பேட்டிற்கு காய்கறி சந்தையை மாற்றுவது தொடர்பாக கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் ராஜசேகர் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார். கோயம்பேடு சந்தை மீண்டும் திறக்கப்படுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது திருமழிசையில் காய்கறி சந்தை தொடர்ந்து இயங்கி வருகிறது. இந்நிலையில் நோய் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக இந்த செப்டம்பர் மாதம் முழுவதும் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் திருமழிசை காய்கறி சந்தை விடுமுறை விடப்படும் என கோயம்பேடு அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு தலைவர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.