தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. தமிழகத்தின் முக்கிய கட்சியான திமுக அடுத்து ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் செயலாற்றி வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் முதல்வர் வேட்பாளராக களம் இறங்க உள்ளார். இந்நிலையில் கோவையில் மு.க.அழகிரிக்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக் காலமாக திமுகவில் இருந்து விலகி அரசியல் செயல்பாடுகள் எதுவும் இல்லாமல் அழகிரி இருந்து வரும் நிலையில், அஞ்சா நெஞ்சனே நேரம் நெருங்கிவிட்டது, உண்மை தொண்டன் வெற்றியை உறுதி செய்ய வாரீர்….. கழக ஆட்சி என்றும் கலைஞர் ஆட்சி அமையட்டும்… என்று எழுதப்பட்டுள்ள போஸ்டர்கள் கோவை நகர் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் அரசியல் செய்து செல்வாக்கு பெற்றுள்ள மு.க. அழகிரிக்கு ஆதரவாக கொங்கு மண்டலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் திமுகவின் பொதுச்செயளாலர் யார் பொருளாலர் யார் என்பதை முடிவு செய்ய அந்தக் கட்சி தயாராகி வரும் நிலையில் அழகிரி ஆதரவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது
ராய்-
திமுப்க உறுப்பினர் மு.க.அழகிரிக்கு அஞ்சாநெஞ்சனே நேரம் நெருங்கிவிட்டது உண்மை தொண்டன் வெற்றியை உறுதி செய்ய வாரீர் கழக ஆட்சி என்றும் கலைஞர் ஆட்சி அமையட்டும் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் கோவை ரயில் நிலையம் பகுதியில் ஒட்டப்பட்டுள்ளன. முதல்வர் தேர்தலில் திமுக சார்பில் முதல்வர் இடத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடுவார் என்று அனைவரும் எண்ணி கொண்டிருக்கும் நிலையில் மு.க.அழகிரிக்கு வெற்றியை உறுதி செய்ய வாரீர் என்ற வாசகங்களுடன் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது கோவையில் மக்களிடையே குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை செய்தியாளர் பிரசன்னா.