தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக விரோத செயல்களை செய்யும் கும்பல்களை கண்காணித்து அவர்களை பிடிக்க இரண்டு உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 2 தனிப்படை அமைத்து தேடும் பணி நடைபெறுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அனைத்து ஓய்வு பெற்ற காவல்துறையினர் நல சங்கம், தூத்துக்குடி மாவட்டம் சார்பாக வீர மரணமடைந்த காவலர் சுப்பிரமணியநின் 16வது நாள் நினைவு அஞ்சலி. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் தூத்துக்குடியில் நடைபெற்றது.
இந்த நிகல்வில் சுப்பிரமணிதந் படத்திற்கு மாலை அணிவித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று அஞ்சலி செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலில் ஓய்வுபெற்ற காவலர்கள் எந்நேரமும் அவர்களது எந்த ஒரு பிரச்சினைக்கும் தன்னை நேரடியாக சந்தித்து தங்கள் பிரச்சினைகள் குறித்து கூறவும் அவர்களுக்கு உடனடியாக அவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் எனவும் கூறினார். மேலும் ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு பகுதி மற்றும் வனத்துறை ஆகிய பகுதிகளில் ரவுடிகள் தங்கி உள்ளனரா என்றும், ரவுடிகளை கண்காணித்து அவர்களை பிடித்து வழக்கு பதிவு செய்த இரண்டு உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 2 தனிப்படை அமைத்து தேடி வருவதாகவும் ரவுடியிசம் எங்கு இருந்தாலும் அவை கட்டுப்படுத்தப்படும் எனவும் கூறினார். இறந்த காவலர் சுப்பிரமணியத்தின் குடும்பம் எங்களது குடும்பம் என்று கூறிய எஸ்.பி, அவர்களுக்கு 86 லட்சத்து 50 ஆயிரம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வழங்கியுள்ளதாகவும், அவரது மனைவிக்கு அரசு வேலை வழங்கவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்றும் கூறினார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் உட்பட காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
தூத்துக்குடி செய்தியாளர் அலெக்ஸ் பாண்டியன்