சில தினங்களுக்கு முன்பு அரியர் தேர்வு எழுதுவதற்கு கட்டணம் செலுத்தியிருந்தால் அந்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என்று. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பினை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் போஸ்டர்கள் பேனர்கள் வைக்கப்பட்டன. கோவையிலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இன்று கோவை ரயில் நிலையம், அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் தனியார் கல்லூரியின் சார்பில் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அந்த போஸ்டரில் நன்றிகளை நிலையான வாக்குகளை அள்ளி தருவோம் என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
அதே போல் வேறு ஒரு போஸ்டரில் மாணவர்களின் ஒளிவிளக்கே மாணவர்களின் கல்விக் கடவுளே என்ற வாசங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அதில் பத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக வெளியான அறிவிப்பை தொடர்ந்து முதல்வர் மாணவர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார்.
கோவை செய்தியாளர் பிரசன்னா