திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதியான கேசி பட்டி கிராமத்தில் கடந்த சனிக்கிழமை மாலதி என்ற பெண் பெட்ரோல் ஊற்றி எரித்து தற்கொலை செய்து கொண்டார். அதே பகுதியை சேர்ந்த சதீஸ் என்பவர் மாலதியுடன் பழகி கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்ததாகவும்,
இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 7 நாட்களுக்கு முன்பு சதீஸ் வேறு பெண்ணை திருமணம் செய்து கொணடார். இதனால் மனமுடைந்த மாலதி சதீசின் தகப்பனார் டீ கடை முன் கடந்த சனிக்கிழமை பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொண்டதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாயினர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த வீடியோவை எடுத்தது யார் என்பது குறித்து தாண்டிக்குடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
துயர சம்பவத்தை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிறக்கம் செய்தது சரவணகுமார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து சரவணக்குமார் மீது தாண்டிக்குடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
சரவணகுமார் சதீசின் என்பவரின் அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது
கொடைக்கானல் செய்தியாளர் அருண்