திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பரளி,வத்திபட்டி,கோவில்பட்டி, சமுத்திராபட்டி,சிறுகுடி, உள்ளிட்ட பகுதிகளில் காலை இருந்து திடீர் என கருமேகங்கள் சூழ்ந்தது அதை தொடர்ந்து பலத்த காற்று மற்றும் கூடிய மழை ஒரு மணி நேரமாக மேலாக பெய்தது.
இதனால் சாலைகள் மற்றும் வீதிகளில் இருபுறமும் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நத்தம் பகுதியில் பல நாட்கள் பிறகு பலத்த மழை பெய்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்