தமிழகத்தில் இருந்து கேரளாவிற்க்கு கடத்தவிருந்த ரேசன் அரிசி பறிமுதல்..
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து புளியரை வழியாக கேரளாவிற்கு ரேசன் அரிசிகளை சமூக விரோத கும்பல்கள் கடத்தி விற்பனை செய்து வருகிறார்கள் இதனை தடுப்பதற்காக தென்காசி மாவட்டம் புளியரை பகுதிகளில் வாகன தணிக்கை செய்யபட்டு வருகிறது இந்நிலையில் இன்று அந்தவழியாக வந்த ஒரு வாகனத்தை போலீசார் சோதனையிட்டனர் அதில் தமிழக ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கபடவிருந்த இலவச அரிசி மூடைகள் சுமார் பத்து டன் அரிசி பதுக்கி வைக்கபட்டிருந்த்து கண்டுபிடிக்கப்பட்ட து இதனை தொடர்ந்து கடத்திவந்த அரிசிகளை தனிபிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர் வாகனத்தை ஓட்டிவந்த டிரைவரையும் கைது செய்து புளியரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்