கோவை மாவட்டம் சிந்தாமணி பகுதியில் திருநங்கைககள் 10 பேர் இணைந்து “கோவை டிரான்ஸ் கிச்சன்” என்ற உணவகத்தை துவக்கி உள்ளனர்.
இந்த உணவகம் முழுக்க முழுக்க திருநங்கைகளால் மட்டுமே செயல்பட கூடிய உணவகம் என்பதே இதன் சிறப்பம்சமாகும். தற்போது 10 பேர் இணைந்து இதை ஆரம்பித்துள்ளனர். இவர்களுக்கு UWC ஸ்வஸ்தி, சி.எஸ்.ஐ, அப்பாசாமி கல்லூரியினர் உதவியுள்ளனர். அப்பாசாமி கல்லூரியில் இந்த 10 பேருக்கு உணவகம் செயல்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது 10 பேரால் இயங்கும் இந்த உணவகமானது மக்களிடையே நன் வரவேற்பை பெற்று செயல்பட்டால் 6 மாதம் கழித்து மற்றொரு கிளை ஆரமிக்க திட்டமிட்டள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
திருநங்கையினருக்கு வாழ்வாதாரம் அளிக்க இந்த உணவகம் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்வோம், வழக்கமான ஹோட்டல்களை போன்றே இதுவும் இயங்கும் என்று கோவை மாவட்ட திருநங்கைகள் சங்க தலைவர் சங்கீதா தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக திருநங்கைகளால் முழுக்க முழுக்க செயல்படும் உணவகம் இதுவேயாகும் என்றும் தெரிவித்தார்.
கோவை செய்தியாளர் பிரசன்னா