ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பொதியாமூப்பனூரில் ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற தம்பிக்கலை அய்யன் திருக்கோவில் அமைந்துள்ளது.
ஆண்டுதோறும் ஆவணி மாதம் தேர்திருவிழாவுடன் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும்.
கடந்த வாரம் நடைபெற வேண்டிய முதல் பூஜையானது தமிழக அரசின் 144 தடை உத்தரவால் நின்றுபோனது.
அரசு நேற்று முதல் ஊரடங்கு தளர்வு அறிவித்ததை அடுத்து மறுபூஜை தினமான இன்று தம்பிக்கலை ஐயன், மாடசாமி, கருப்புசாமி, காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
பக்தர்கள் பொங்கல் வைத்தும், மொட்டை அடித்தும் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.
மேலும் அங்குள்ள ராகு கேதுவிற்கு பக்தர்கள் மஞ்சள் அபிஷேகம் செய்து தரிசனம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.
தடை உத்தரவுக்கு பின் ஈரோடு மாவட்டத்திலேயே முதல் பண்டிகை தம்பிகலை அய்யன் கோவில் திருவிழா என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு அந்தியூர் செய்தியாளர் எஸ் திருபாலா