தன்னுடன் தொடர்பில் இருந்த அமைச்சர்கள் செங்கோட்டையன் , கருப்பணன் மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் உட்பட அனைவரையும் கொரோனோ பரிசோதனை செய்து கொள்ளும்படி அமைச்சர் ஓ.எஸ் மணியன் வேண்டுகோள்…..
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் மனைவி உடல் நலமின்றி உயிரிழந்தார்.
அதனை தொடர்ந்து துக்கம் விசாரிக்க அதிமுக வை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் எம்.எல்.ஏக்கள் என பல்வேறு தரப்பினர் அவரது இல்லத்திற்கு சென்று வந்துள்ளனர்.
இந்நிலையில் அமைச்சர் ஓ.எஸ் .மணியனின் நெருங்கிய உறவினர் ஒருவருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவருடன் நெருங்கிப்பழகிய ஓ.எஸ்.மணியன் தன்னை தானே தனது இல்லத்தில் தனிமை படுத்திக்கொண்டார்.
மேலும் தன்னிடம் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கோள்ளும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், கருப்பணன் ஆகியோர் ஓ.எஸ்மணியன் இல்லத்திற்கு துக்கம் விசாரிக்க சென்று வந்ததையடுத்து அவர்களை கொரோனா பரிசோதனை கொள்ளும்படி அமைச்சர் ஓ.எஸ் மணியன் வேண்டுகோள் விடுத்திருப்பது இவர்களுக்கு நெருக்கமான அதிமுக வினர் மத்தியில் மிகுந்த அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.