ஈரோடு மாவட்டம், பவானி அருகிலுள்ள ஆண்டிக்குளம் ஊராட்சி பகுதியில் காடையம்பட்டி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக் கரையின் ஓரத்தில் முதலியார் சமூகத்தினருக்கான புடவைக்காரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இதுவரை விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட வில்லை. இதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாகிகள் சிறிய அளவிலான செல்வ விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து 2-ம் தேதி ஈரோடு ஆதீனம் பாலாஜி சிவம் தலைமையிலான குருக்கள் கணபதி பூஜையுடன் தொடங்கி மூன்று கால யாக பூஜை நடத்தி கும்பாபிஷேகம் நடத்தி வைத்துள்ளனர். பின்னர் செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஈரோடு பவானி
ஜி. கண்ணன்