கிருஷ்ணகிரி அருகே உள்ள மிகவும் பழமையான ஹஸ்ரத் முஹம்மத் சுலைமான் ஷா காதிரி அவர்களின் தர்காவில் முஹரம் திருவிழாவில் அனைத்து சமுதாய மக்களும் கலந்துக் கொண்டு வழிப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம்
செந்தாரப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள 800 ஆண்டு பழமை வாய்ந்த ஹஸ்ரத் முஹம்மத் சுலைமான் ஷா காதிரி தர்காவில் 33- ம் ஆண்டு அண்ணலார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழித்தோன்றல் ஹஸ்ரத் சையதினா இமாம் அலி (ரஸி) அவர்களின் கொடியேற்றம் மற்றும் உத்தம நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருப்பேரர்கள் இஸ்லாத்தின் புகழ்உயர்த்திய பெருமகன்கள் வீரத் தியாகிகளின் நாயகர்கள் ஹஸ்ரத் சையதினா இமாம் ஹஸன் (ரஸி) ஹஸ்ரத் சையதினா இமாம் ஹூசேன் (ரஸி) அவர்களின் தியாக நினைவு நாள் முஹரம் பாத்திஹா
கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
இந்த விழாவின் போது தர்காவில் சிறப்பு பாத்திஹா நடைப்பெற்று விழாவில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கொடி கம்பத்தில் கொடி ஏற்றி வைத்து இஸ்லாமியர்கள் பிரார்த்தனையில் ஈடுப்பட்டனர்.
இதில் சாதி மத பேதமின்றி ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டு இஸ்லாத்தின் வீரத் தியாகிகளின் ஆசி பெற்றார்கள்.
இந்த விழாவின் போது அனைத்து சமுதாய மக்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து
ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.
இவ்விழாவில் வீரத் தியாகிகளின் நாயகர்கள் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்திகளின் வாழ்க்கை புகழ் மற்றும் மனிதகுலத்தின் மீட்சிக்கான சொற்பொழிவு நடைபெற்றது.
இந்த விழாவில் அனைத்து மத மக்களுக்கும் அண்ணதானம் வழங்கபட்டது.
முஹரம் விழாவை சிறப்பாக செய்து இருந்தனர்.
இங்கு நடைபெறும் திருவிழாக்கள் அனைத்தும் காலகாலமாக தர்கா நிர்வாகி ஹஸ்ரத் ஷேக் முஹம்மத் அன்வர் ஷா காதிரி மற்றும் குடும்பத்தார், சீடர்கள் நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கிருஷ்ணகிரி செய்தியாளர் ரிஸ்வான்