தென் மண்டல ஐ.ஜி திரு. எஸ். முருகன், இ.கா.ப அவர்கள் தலைமையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான அறிவுரை கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக மாவட்ட காவல் அலுவலகத்தில் தென் மண்டல ஐ.ஜி திரு. எஸ். முருகன், இ.கா.ப அவர்கள் தலைமையில், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி திரு. பிரவீண்குமார் அபிநபு இ.கா.ப, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் இ.கா.ப ஆகியோர் முன்னிலையில் அமைச்சு பணியாளர்களுக்கான அறிவுரை கூட்டம் நடைபெற்றது.
அதன் பிறகு கிருஷ்ணாபுரம் அருகே உள்ள முத்து மஹாலில் வைத்து நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தின் போது, தென் மண்டல காவல்துறை தலைவர் திரு. எஸ். முருகன் இ.கா.ப அவர்கள் தலைமையில், திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் திரு.பிரவீண் குமார் அபிநபு இ.கா.ப, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் இ.கா.ப ஆகியோர் முன்னிலையில், திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு.சுப்புராஜூ மற்றும் அனைத்து உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், அனைத்து காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் காவல்துறையினர் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் எனவும், மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை திறம்பட செயல் புரிவதற்கு ஆலோசனைகளை வழங்கினார்
பின்னர் திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு தென்மண்டல காவல்துறை தலைவர் திரு. எஸ். முருகன், இ.கா.ப அவர்கள் நற்சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.