வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் அரைமணி நேரம் கன மழை பெய்தது. நீர் செல்லும் பாதைகள் அடைப்பால் மழை நீருடன் கழிவு நீர் கலந்து சாலைகளில் தேங்கியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் சுமார் அரைமணி நேரம் கன மழை பெய்து. நீர் பாதைகள் அடைப்பால் மழை நீர் செல்லமுடியாமல் கழிவு நீர் கலந்து சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிபட்டடனர். மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.