நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி , கூடலுார், பந்தலூர் தாலுக்கா உள்ளிட்ட பகுதிகளில் 60 சதவீதம் பேர் தேயிலை விவசாயம் செய்து வருகின்றனர் நீலகிரியில் தேயிலை, மலை காய்கறி என இரு விவசாயத்திலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் பெரும்பாலான வர்கள் சிறு மற்றும் குறு விவசாயிகளே இவர்கள் அரை ஏக்கர் முதல் 10 ஏக்கர் வரை தேயிலை தோட்டங்களை வைத்து உள்ளனர். அதில் கிடைக்கும் வருவாயை கொண்டு வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
பச்சை தங்கம் என வர்ணிக்கப்படும் தேயிலை நீலகிரியில் இருந்து பெரும்பாலும் ரஷ்யா, மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்நிலையில் 22 ஆண்டுக்கு பின் தற்போது தேயிலை விலை தமிழக அரசின் தீவிர முயற்சிக்கு பின் இன்ட்கோ சர்வ் பச்சை தேயிலை விலை ரூ.28 ரூபாய்
நிர்ணயித்துள்ளது இதனால் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி உள்ளனர்.
மேலும் இன்ட்கோ சர்வ் தலைவர் சிவக்குமார் கூறுகையில் விவசாயிகள் சார்பில் தமிழக முதல்வர் மற்றும் தொழில் துறை அமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொண்டார். தேயிலை விவசாயி காளிதாஸ் கூறுகையில் தனியார் தேயிலை தொழிற்சாலைகள் தரமான தேயிலைக்கு மட்டும் 1 கிலோக்கு ரூ 30 முதல் 35 ரூபாய் கொடுக்கப்பட்டு வருகிறது ஆனால் இன்ட்கோ சர்வ் நிறுவனம் பச்சை தேயிலை விவசாயிகளின் நலன் கருதி வாழ்வாதாரம் பெருக அனைத்து பச்சை தேயிலைக்கு தரம் பார்க்கமல் கிலோவிற்கு ரூ. 28 வழங்கி வருகிறது இதனால் பச்சை தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.