ஈரோடு மாவட்டம், அந்தியூரில் தேமுதிக சார்பில், கட்சியின் தலைவர் விஜயகாந்தை கேலி செய்யும் வகையில் சித்தரித்து கார்ட்டூன் வெளியிட்ட தினமலர் நாளிதழை எரித்து போராட்டம் நடந்தது.
தினமலர் நாளிதழில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை கேலி செய்து கார்ட்டூன் வெளியாகியுள்ளது. இது சம்பந்தமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் தேமுதிக வினர் தினமலர் நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்து வருகின்றனர்.
இதன் அடிப்படையில், அந்தியூர் நகரம், ஒன்றியம் சார்பில், மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் ராஜா சம்பத் தலைமையில், அந்தியூர் காவல் நிலையத்தில், உதவி ஆய்வாளர் வெங்கடாச்சலபதியிடம் புகார் அளித்தனர்.
இதை தொடர்ந்து, அந்தியூர் காந்தி மைதானத்தில் தினமலர் நாளிதழை எரித்து கோஷம் எழுப்பி எதிர்ப்பை தெரிவித்தனர். இதில், ஒன்றிய செயலாளர் ரமேஷ்குமார், நகர செயலாளர் ஜாகீர், நகர பொருளாளர் விஜயக்குமார், தலைமை கழக பேச்சாளர் ஆண்டனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு அந்தியூர் செய்தியாளர் எஸ் திருபாலா.