ஆலங்காயம் அருகே சோக சம்பவம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த கோமுட்டேரி பகுதியை சார்ந்தவர் பெருமாள் வெல்டிங் கடை நடத்தி வருகிறார்.
இவரது இளைய மகன் சீனிவாசன் 12 ஆம் வகுப்பு முடித்து தேர்வான நிலையில் கொரோனா ஊரடங்கு விடுமுறை காலத்தில் தொடர்ந்து செல்போனில் பப்ஜி கேம் விளையாடுவதில் அதிக நாட்டம் காட்டியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து மத்திய அரசு பப்ஜி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து நேற்று அறிவிப்பு வெளியிட்டு தொடர்ந்து சீனிவாசனின் தந்தை இன்று மதியம் பப்ஜிகேம் விளையாடுவது தவறு அரசே தடை செய்துவிட்டது விளையாட கூடாது என சீனிவாசனிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு அறிவுரை கூறி கண்டித்துள்ளார்.
இதனால் மனமுடைந்த மாணவர் சீனிவாசன் வீட்டில் உள்ள தனது அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஆலங்காயம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சீனிவாசனின் சடலத்தை கைப்பற்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.