புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள தாஞ்சூரில் ஆதிதிராவிட காலனி பகுதி மக்களால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள ஒரு குளக்கரையில் செல்வவிநாயகர் கோவில் கட்டப்பட்டது. அந்த கோவில் புதிப்பித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கோவில் குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக தனிநபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையில் முடிவில் கோவில் குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாகவும் உடனடியாக கோவிலை அகற்ற வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமயம் வட்டாட்சியர் மற்றும் அரிமளம் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கே புதுப்பட்டி காவல் துறையினர் முன்னிலையில் கோவிலை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே கோவிலில் உள்ள சிலையை மட்டும் வெளியில் எடுத்துவிட்டு கோவிலை எடுக்காமல் சென்றுவிட்டனர் இந்நிலையில் மீண்டும் மதுரை உயர்நீதிமன்ற கிளை தனிப்பட்ட இரண்டு நபர்கள் தொடர்ந்த வழக்கில் நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள கோவிலை இடிக்க உத்தரவிட்டதையடுத்து இன்று வருவாய் துறையினர் காவல் துறையினரின் பாதுகாப்போடு அப்புறப்படுத்த வந்தபோது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தும் கோவில் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் உள்ளது தனிப்பட்ட இரு நபர்களின் கால் புணர்ச்சியால் கோவிலை இடிக்க வழக்கு தொடர்ந்துள்ளனர்
கோவிலை இடித்தால் உயிரை மாய்த்துக் கொள்வோம் என்று கூறி கைகளில் மண்ணனை கேனுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடும்ப அட்டை ஆதார் அட்டை வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சாலையில் போட்டு முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் வருவாய்த் துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் அந்த பகுதி பொதுமக்கள் கோவிலை இடிக்க உயிர் போனாலும் விடமாட்டோம் என்று கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.