
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை நான்கு வழி சாலையில் துவரங்குறிச்சியில் இருந்து பந்தல் சாமான்களை டாட்டா ஏஸ் வண்டியில் ஏற்றிக்கொண்டு மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பொழுது விராலிமலை ரெண் கம்பெனி அருகே டாட்டா ஏஸ் வண்டியில் பின் டயர் திடீரென வெடித்தது வண்டி வேகமாக சென்று கொண்டிருந்த காரணத்தினால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வண்டி நடு ரோட்டிலேயே தலைகுப்புற சுழன்று விழுந்தது இதனால் அப்பகுதியே பலத்த சத்தம் ஏற்பட்டது உடனடியாக அக்கம்பக்கத்தினர் விராலிமலை காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தலைகுப்புற விழுந்த டாட்டா ஏசை பளு தூக்கும் இயந்திரத்தின் உதவியுடன் வண்டியை மீட்டனர் அப்பொழுது வண்டிக்குள் 3 பேர் பலத்த காயத்துடன் இருப்பதை கண்டு உடனடியாக அவர்களை மீட்டு திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் மருத்துவமனை கொண்டு செல்லும் வகையில் குழந்தை என்பவரின் மகன் முருகன் இறந்துவிட்டார் மூக்கையா என்பவரின் மகன் முருகன் சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார் இருவரின் சடலங்கள் மருத்துவமனையில் உள்ளன இந்நிலையில் வண்டியை ஓட்டி வந்த ரங்கசாமி மகன் ஏழுமலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இறந்தவர்கள் இரண்டு பேரும் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது மேலும் ஓட்டுனர் ரெங்கசாமி புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டி சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது இந்த சாலை விபத்து தொடர்ந்து அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது பின்னர் காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்தனர் சாலை விபத்தில் இரண்டு பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..