திண்டுக்கல் மாவட்டம் நத்தம் யூனியன் அலுவலகம் அருகே பிரகாஸ் மண்டல்(37) என்பவர் லெட்சுமி ஆயுர்வேதிக் சென்டர் என்ற மருத்துவமனை வைத்துள்ளார். அங்கு அவர் நோயாளிகளுக்கு பல மாதங்களாக மருத்துவம் பார்த்து மருந்து, மாத்திரைகள் கொடுப்பதாக மாவட்ட மருத்துவத்துறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து அங்கு சென்ற திண்டுக்கல் மாவட்ட தனிப்படை மருத்துவகுழு அவரிடம் விசாரணை செய்தனர். அப்போது 9ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு வைத்தியம் பார்த்தாக தெரியவந்ததையடுத்து அவரை நத்தம் போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நத்தம் செய்தியாளர் : வசந்த சித்தார்த்தன்