கோவை தடாகம் சாலையில் உள்ள கணுவாய் பகுதியில் இருந்து 10 நிமிடங்களுக்கு ஒரு முறை ரயில் நிலையத்திற்கு 11 என்ற பேருந்தும், 30 நிமிடங்களுக்கு ஒரு முறை காந்திபுரம் செல்லும் வந்து செல்லும் பேருந்துகளின் வழித்தடமாக உள்ளது. இந்த கணுவாய் பேருந்து நிலையத்தில் உள்ள அனைத்து பயணிகள் இருக்கைகளும் சிதிலமடைந்தும், சேதமடைந்தும், பயணிகள் அமர முடியாத வகையில், யாருக்கும் பயணற்று உள்ளது, இதனால் நீண்ட நேரம் பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகள், அமரமுடியாத சூழல் ஏற்படுகின்றது.
காத்திருக்கும் வேளைகளில் பேருந்து நிலையங்களில் இருக்கைகள் இல்லாமல் கால் கடுக்க நின்றபடி தவித்து வருகின்றனர். தமிழகத்தில் கோரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தற்போது சற்று தளர்வுகளுடன், அரசு, மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதுபோன்ற பேருந்து நிலையங்களில் இருக்கைகள், மற்றும் சிதிலமடைந்த கட்டிடங்கள் என அனைத்தையும் அதிகாரிகள் ஆய்வு செய்து, அதனை சீரமைத்து, மக்களின் பயன்பாட்டிற்கு, கோவை மாவட்ட நிர்வாகம், மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சீர், செய்ய வேண்டும் என்று பயணிகள் காத்திருக்கின்றனர்… சீர் செய்ய படுமா? பேருந்து நிலைய பயணிகள் இருக்கைகள்?
கோவை செய்தியாளர் பிரசன்னா