கிருஷ்ணகிரி மாவட்டம் கல்குட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி. இவருக்கு இரண்டு மகன்கள் மூன்று மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் திருப்பதி தனது 40 ஏக்கர் சொத்தை மகன் கிருஷ்ணமூர்த்திக்கு எழுதி கொடுத்து உள்ளார். இதனால் மூன்று மகள்களும் ஒன்று சேர்ந்து அந்த சொத்தில் தங்களுக்கும் உரிமை உள்ளது அதனை சரி பாதியாக பிரித்து தங்களுக்கும் வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கிருஷ்ணமூர்த்தி தனது தங்கையை அங்கிருந்து காலி செய்யுமாறு அவ்வபோது தகராறு செய்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டை காலி செய்து செல்லுமாறு இன்று கிருஷ்ணமூர்த்தி கையில் அரிவாளுடன் தனது தங்கை ஜெயராணியை வெட்ட ஆக்ரோஷத்துடன் வந்துள்ளார். இதனை தனது செல்போனில் பதிவு செய்த ஜெயரானியின் மகன் சமூக வளைதளத்தில் வெளியிட்டு உள்ளார். அதில் கோவத்துடன் சொந்த தங்கையை வெட்ட அரிவாளுடன் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிருஷ்ணமூர்த்தியை அங்கிருந்தவர்கள் சமாதனாம் செய்து அனுப்பி வைக்கின்றனர்.
சொத்திற்க்காக சொந்த தங்கையை அண்ணனே வெட்ட வந்த வீடியோ சமூக வளைதளத்தில் வைரலான நிலையில் காவேரிப்பட்டினம் போலீசார் கிருஷ்ணமூர்த்தி மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இதுவரை கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்படவில்லை.