கோபிசெட்டிபாளையம் பகுதியில் வசிக்கும் படித்த இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு.
கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கொங்கர்பாளையம் மற்றும் அரக்கன் கோட்டை பகுதியில் அதிமுக வின் கட்சி அலுவலகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்த பின்னர் பேசிய போது:
பள்ளிக் குழந்தைகளுக்கு டிசம்பர் மாதம் இறுதிக்குள் “ஷூ” வழங்கப்படும் என்றும்
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட சீருடைகளுடன் மேலும் கூடுதலாக மூன்று சீருடைகள் வழங்கப்பட உள்ளதாகவும்.
கோபி பகுதியில் படித்த 3000-ம் இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்கள் மூலம் முகாம் ஏற்படுத்தி வேலை வாய்ப்பு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக சேர்ந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.