வாசுதேவநல்லூர் அருகே பிடிபட்ட 8 அடி நீளம் உள்ள மலைப்பாம்பை பிடித்து தலையணை வனச்சரக காட்டு பகுதியில் விட்டனர் சங்கரன்கோவில் வனத்துறையினர்….
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வனச்சரக எல்லைக்கு உட்பட்ட வாசு தேவநல்லூர் அருகே கரும்பு நெல் விவசாய நிலங்கள் ஏராளமான உள்ளன..மேலும் அப்பகுதியில் கரும்பு ஆலையும் செயல்பட்டு வருகிறது
மிகுந்த ஆள் நடமாட்ட பகுதியாக வும் உள்ள அப்பகுதியின் விவசாய தோட்டத்தில் 8 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு உள்ளதாக வனச்சரகர் ஸ்டாலின் அவர்களுக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் வன அலுவலர்கள் மற்றும் வன பணியாளர் சம்பவ இடத்திற்கு சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர் அப்போது அங்கு புதர் பகுதியில் பகுதியில் கிடந்த மலைப்பாம்பினை வனத்துறையினர் பிடித்தனர்… மேலும் அப்பகுதியில் மலைப்பாம்பு அடிக்கடி வருவது வழக்கம் அதனை வனத்துறையினர் பாதுகாப்பாக கொண்டு சென்று வனப்குதியில் விட்டு விடுகின்றனர்..
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் செய்தியாளர் சி.முருகேசன்