ஆம்பூர் நகர காவல்துறையினர் விசாரணை.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ – கஸ்பா பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ்,
ஆம்பூரில் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் இவரது வீட்டில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் அறையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த பீரோவில் இருந்த 7 சவரன் தங்க நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் எழுந்த சுரேஷ் வீட்டின் அறையின் பூட்டை உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
உடனடியாக இதுகுறித்து சுரேஷ் ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இக்கொள்ளைச்சம்வம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.