மதுரை மாவட்டம் புறவழிச்சாலையில் உள்ள கருப்புசாமி கோவில் ஒன்று இருந்தது தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இந்த இடத்தில் இந்த கோவிலில் இருந்த காரணத்தினால் கோவிலை அகற்றினார்கள் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் பழமையான மரங்களை மட்டும் அகற்றாமல் நெடுஞ்சாலை துறை சார்பாக வேலி அமைத்து பாதுகாத்து வந்தனர் இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மதுரை மாநகரில் பலத்த காற்றுடன் மழை பெய்து வந்தது நேற்று மாலை சுமார் 6 மணியளவில் பெய்ய தொடங்கிய மழை சூறைக்காற்றுடன் கன மழையாக பெய்ய தொடங்கியது பல இடங்களில் நீர் தேங்கி வாகனங்கள் ஆங்காங்கே பழுதாகி நின்றது இந்த நிலையில் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள ஒரு பழமையான புளியமரம் ஒன்று நேற்று பெய்த மழையில் வேரோடு சாய்ந்து விழுந்தது இது சர்வீஸ் சாலையில் உள்ளதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது அருகிலேயே மின் மாற்றி ஒன்று உள்ளது மின்மாற்றி அருகே சற்று தொலைவில் இந்த மரம் விழுந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது மின் வினியோத்திற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை செய்தியாளர் ரமணன்