கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகைக்காக இ-பாஸ் முறை அமுல்படுத்தியதை தமிழக அரசு ரத்துசெய்திட வேண்டும் என ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது இதில் 160 நாட்களுக்கு மேல் ஊரடங்கு தொடர்ந்ததால் சுற்றுலா பயணிகளை நம்பியுள்ள மக்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் செப்டம்பர் மாதம் ஊரடங்கில் தமிழக அரசு சில தளர்வுகள் அளித்துள்ளது இதில் சுற்றுலா பயணிகள் மலைவாசல் தலங்களான ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட மலை பகுதிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் இ-பாஸ் பெற்று செல்லலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது,
ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் தடை என்றும் மருத்துவ அவசரம் மற்றும் தொழில் சார்ந்த காரணத்திற்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது இந்நிலையில் மலைவாசஸ்தலங்களான மலை பகுதிக்கு மிக குறைந்த எண்ணிக்கையின் அடிப்படையில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் எனவும் சுற்றுலா பயணிகளை அனுமதித்தால் சமூக இடைவெளியுடன் சுற்றுலா இடங்களை கண்டு ரசிப்பதற்கும் ஒருமணி நேரத்திற்கு சுற்றுலாத்தலங்களுக்குள் குறைவான எண்ணிக்கையின் அடிப்படையில் சுற்றுலாப்பயணிகளை அனுமதித்து அவர்களை வழிநடத்துவதற்கு தாங்களே ஆட்களை நியமித்துக்கொள்வதாகவும் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை அனுப்பியுள்ளதாகவும்,இதனை தமிழக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லும் விதமாக மெயில் அனுப்பியுள்ளதாகவும் எனவே தங்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானல் செய்தியாளர் அருண்