கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் குழந்தை வேலப்பர் முருகன் கோவில் சுற்றுசுவர் இடிந்து 10க்கும் மேற்பட்ட கடைகள் மேல் விழுந்து பலத்த சேதம்.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் பூம்பாறை கிராமத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது இதனால் பழனி தண்டாயுதபாணி உபகோவிலான உலக புகழ்பெற்ற குழந்தை வேலப்பர் முருகன் கோவில் சுற்றுச்சுவர் இடிந்து 10க்கும் மேற்பட்ட தகர கடைகள் மீது விழுந்தது இதில் கடைகளின் பின் சுவர் சேதமடைந்தது இருப்பினும் பெரும் உயிர் சேதமோ,பொருள் சேதமோ ஏற்படவில்லை, வியாபாரிகள் கன மழையையும் பொருட்படுத்தாது கடைகளில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்,தொடர் கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து வெள்ளம் போல் ஓடுகிறது.
கொடைக்கானல் செய்தியாளர் அருண்