தமிழகத்தில் வரும் 7-ஆம் தேதி முதல் பயணிகள் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னையில் இருந்து கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து ஏற்கனவே இயக்கப்பட்டு கொரோனா பாதிப்பின் காரணமாக நிறுத்தப்பட்ட ஏழு சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்கப்பட உள்ளது. இதற்காக கோவை ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிகள் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீண்டகாலம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் ரயில் பெட்டிகளை ஊழியர்கள் சுத்தம் செய்து வருகின்றனர்.
கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க ரயில் வாரியம் பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக சுத்தம் செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் ஊழியர்கள் கிரிமி நாசினி தெளித்து ரயில் பெட்டிகளை தயார்படுத்தி வருகின்றனர்.
கோவை செய்தியாளர் பிரசன்னா