டொயோட்டா நிறுவனத்தின் புது வரவான யாரிஸ் சொகுசு காரின் புதிய டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
டொயோட்டா நிறுவனம் யாரிஸ் செடான் மாடலுக்கான புது டீசரை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறது. புதிய மாடலில் சிறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டோ அல்லது லிமிட்டெட் எடிஷன் மாடலாகவோ இருக்கும் என தெரிகிறது. டீசர்களின் படி புதிய யாரிஸ் மாடலின் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது. டீசர் தவிர புதிய யாரிஸ் மாடல் பற்றிய தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. எனினும், இந்த கார் புதிய என்ஜினுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக டொயோட்டா நிறுவனம் ஃபேஸ்லிப்ட் செய்யப்பட்ட யாரிஸ் மாடலை வியோஸ் எனும் பெயரில் சர்வதேச சந்தையில் வெளியிட்டது. இதில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.