கோவை புலியகுளம் கருப்பராயன் கோவில் வீதியில் 40 ஆண்டுகள் பழமையான அரச மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தின் அடியில் சிறிய விநாயகர் சிலை வைத்து பொது மக்கள் வழிபட்டு வந்தனர்.
தொடர்ந்து அந்த அரச மரத்திற்கு இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தினமும் தண்ணீர் ஊற்றி பாதுகாத்து வந்தனர்.
இந்தநிலையில் கோவில் கட்டும் பணிக்கு ஊர் பொதுமக்கள் தீர்மானித்த நிலையில், அரசமரத்தை அப்புறப்படுத்தாமல் கோவில் கட்ட திட்டமிடப்பட்டது.
இதைத்தொடர்ந்து கருப்பராயன் கோவில் வீதி இளைஞர்களின் முயற்சியால் மரம் அப்புறப்படுத்தபடாமல் கோவில் பணிகள் நடைபெற்றன.
இப்படியிருக்க அரச மரம் நடப்பட்டு நாற்பது ஆண்டுகள் ஆன நிலையில் அதைக் கொண்டாடும் வகையில்
அப்பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மரத்திற்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர்.
அதேபோல் கேக் வெட்டிய பின் ஒரு துண்டு கேக்கினை மரத்தின் அடியில் வைத்து நன்றி செலுத்திய இளைஞர்கள், அந்த பகுதி மக்களுக்கு கேக் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கோவை செய்தியாளர் பிரசன்னா