புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மற்றும் கிராமம் ஸ்ரீ ஆத்மநாதசுவாமி தெற்கு ரத வீதி மற்றும் கிழக்கு ரத வீதிகளில் உள்ள கடைகளில் கொரோனா நோய் தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினி தெளித்தல், முகக் கவசம் அணிதல் , சமூக இடைவெளி பின்பற்றுதல் மற்றும் பொதுமக்கள் 5 நபர்களுக்கு மேல் ஒரே நேரத்தில் அனுமதிக்க கூடாது உள்ளிட்ட விதிமுறைகள் குறித்து வட்டாட்சியர் பரணி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது 2 ஃபேன்சி ஸ்டோர், ஒரு பழக்கடை மற்றும் ஒரு ஜவுளிக்கடைகளில் மேற்படி விதிமுறைகள் மீறப்பட்டு இருந்ததால் அந்த கடைகளை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேலும் சாலைகளில் முகக்கவசம் அணியாமல் வந்த 27 நபர்களுக்கு தலா 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வின்போது ஆவுடையார் கோவில் வட்டாட்சியர் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல்துறையினர் , வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் உடனிருந்தனர்
புதுக்கோட்டை செய்தியாளர் கிருஷ்ணமூர்த்தி