தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சியை சேர்ந்த பலர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து வருகின்றனர். அதைப்போல் இன்று புதுக்கோட்டை பூங்குடி கிராமத்தில் மணிகண்டன் ஜெயசக்தி ஆகியோருக்கு திருமணம் நடைபெற்றது. இதில் மணிகண்டன் திமுகவில் உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில் இன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட துணைத்தலைவர் ஏவிசிசி கணேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆதவா செல்வகுமார் ஆகியோரின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து கொண்டு உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் நகர பொதுச் செயலாளர் லட்சுமணன் பொருளாதார பிரிவு மாவட்ட தலைவர் சீனிவாசன் சரவணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். புதுக்கோட்டையில் மணக்கோலத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக்கொண்ட மணமக்களுக்கு பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து உறுப்பினர் அட்டையை வழங்கினர்.
புதுக்கோட்டை செய்தியாளர் கிரிஷ்ணமூர்த்தி