திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ரூ.18 கோடி மதிப்பீட்டில் குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு தரைத்தளத்துடன் கூடிய ஐந்து மாடிக் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டிடப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவன் அருள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பணிகளை விரைவாக முடித்துவிட வேண்டுமென்று ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டதோடு, நாள்தோறும் பணிகளை பார்வையிட்டு அதன் நிலையினை உடனுக்குடன் தனக்கு தெரிவிக்குமாறு மருத்துவமனை மருத்துவர்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.
திருப்பத்தூர் செய்தியாளர் சுஜாதா