ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு ஆசிரியர்களை கௌரவிக்கும்
வகையில் அவர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.
ஆனால் இந்தாண்டு இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உயிரிழந்ததையடுத்து இன்று நடைபெற இருந்த நல்லாசிரியர் விருது வழங்குவதற்கான தேதி வரும் 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்
பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை பிரகதம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மரம் அறக்கட்டளை சார்பில் மரம் நடும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிக் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பிரகதம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், துணை ஆய்வாளர் குரு மாரிமுத்து, மரம் அறக்கட்டளையின் தலைவர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.