
சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 149 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சி சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் இந்து மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் ராம.குணசீலன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.