தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அறியாமை என்னும் இருள் நீக்கி அறிவு எனும் தீபம் ஏற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள் தெரிவிப்பதாக கூறினார்.
மேலும், செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி திறக்கும் வரை சத்துணவு பொருட்களுடன் 10 முட்டை வழங்கப்படும் என்று கூறிய அமைச்சர்,
தனியார் பள்ளிகளில் 40 சதவீதம் தான் கட்டணம் வசூலிக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும் கேரளாவில் அடுத்த ஆண்டு பள்ளி திறப்பு என முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் பள்ளி திறப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் பள்ளி திறப்பதற்கான சாத்திய கூறு தற்போது இல்லை என்றும் அமைச்சர் சென்கோட்டையன் விளக்கம் அளித்தார்.
கோபி செய்தியாளர் ராமசந்திரன்.