காந்திபுரம் பகுதியில் உள்ள மக்கள் சேவை மைய அலுவலகத்தில் பா.ஜ.க மாநில துணை தலைவர் வானதி சீனிவாசனை தமிழ்நாடு ஏகாத்துவ ஜமாஅத் அமைப்பின் தலைவர் இப்ராஹிம் சந்தித்து பேசினார்.
மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் விதமாக கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை செல்லும் யாத்திரைக்கு ஆதரவு கோரினார். இதன் பின்னர் பா.ஜ.க துணை தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை பேட்டி அளித்தார்.அப்போது பேசிய அவர் பா.ஜ.கட்சியில் முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை இணைந்திருப்பது இளைஞர்களுக்கு உத்வேகத்தை கொடுத்துள்ளது என தெரிவித்தார். அண்ணாமலைக்கு
பா.ஜ.க கட்சி அமைப்பு விதிமுறைகளை மீறி கூடுதலாக துணைதலைவர் பதவி கொடுக்கப்படவில்லை எனவும் சில நேரங்களில் பா.ஜ.க அமைப்பு விடயங்களில் விதி விலக்குகள் உண்டு எனவும் தெரிவித்தார்.அண்ணாமலைக்கு துணை தலைவர் பதவி விதி விலக்குகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.அமைப்பு விதிகளை மாற்றம் செய்து கொள்வது குறித்து தலைவர் முடிவு செய்து கொள்ளலாம் எனவும் இதில் ஒன்றும் தவறில்லை எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
இதற்கு முன்பு பா.ஜ.க
கட்சி உறுப்பினராக இல்லாமல் அமைச்சராக பதவி ஏற்ற வரலாறு உண்டு எனவும் சுரேஷ்பிரபு, ஜெய்சங்கர் போன்றவர்கள் கட்சியில் சேர்ந்தவுடன் பதவிகள் வழங்கப்பட்டு இருக்கின்றது என தெரிவித்தார்.அண்ணாமலையின் வரவு பா.ஜ.கவிற்கு கூடுதல் பலம் என கூறிய அவர் திறந்த மனதோடும்,மனமகிழ்வோடு பா.ஜ.க குடிம்பத்திற்கு வரவேற்று இருக்கின்றோம் என்றவர் அவருக்கு பணிகள் விரைவில் ஒதுக்கப்படும் என தெரிவித்தார்.
பா.ஜ.க கட்சியில் பல வருடமாக கட்சிக்கு உழைத்துக்கொண்டு இருந்தாலும் திறமைகளுடன் புதிதாக வருபவர்களுக்கும் கட்சி அங்கீகாரம் கொடுக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம்,புதியதாக கட்சிக்கு வருபவர்களுக்கு கொடுக்கும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.எல்லா துணை தலைவர்களுக்கும் தனி தனியாக பணிகள் இருக்கும் எனவும் புதியதாக யாராவது வந்தால் அதிகாரம் போய் விட்டது என யாரும் நினைக்க வேண்டியதில்லை என கூறிய அவர் அவரவர்களின் பணிகள் நடைபெற்று கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.கட்சியில் சில மாற்றங்கள் வரலாம் எனவும் துணைதலைவர்களுக்கு வேறு பதவிகள் கொடுக்கப்படலாம் எனவும் தெரிவித்த அவர் அமைப்பு விதிமுறை மீறப்பட்டு இருப்பது குறித்து கட்சிகாரங்கள் தான் கவலைப்பட வேண்டும்.இங்கு கட்சிகாரர்கள் யாரும் இது குறித்து பேசவில்லை வெளியில் இருப்பவர்கள் தான் கவலை படுகின்றனர் என தெரிவித்தார்.
அரசியல் களத்தில் இருப்பவர்கள் தான் மக்களை சென்றடைந்து அவர்களுக்கு உதவ முடியும் எனவும் அதிகாரத்திற்கு வர நினைத்து ரஜினிகாந்த் அரசியல் கட்சியை துவங்கினால் அதை தாங்கள் வரவேற்கின்றோம் எனவும் விரைவில் அவர் வரட்டும் என்றார்.அரசியல் களத்தில் கூடுதல் வீரராக ரஜினிகாந்த் வர வேண்டும் எனவும் வீரராக வந்த பின் யார் கேப்டன் என்பதை காலம் முடிவு செய்யும் எனவும் தெரிவித்தார்.
கோவை செய்தியாளர் பிரசன்னா