திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட வார்டு எண்-28-ல் ஒட்டு மொத்த தூய்மை பணி மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் வீடு வீடாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல், புகைமருந்து அடித்தல், வீதியில் கிருமிநாசினி தெளித்தல் மற்றும் தூய்மைபடுத்துதல் பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி அவர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் நகராட்சி பணியாளர்கள் இருந்தனர்.
திருப்பத்தூர் செய்தியாளர் சுஜாதா