ஈரோடு மாவட்டம், பவானி அருகிலுள்ள அத்தாணி, கீழ்வாணி, இந்திரா நகர் பகுதியில் அம்மாவாசை என்பவர் தனது குடும்பத்தினர் உடன் வசித்து வந்துள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் இவரின் மகளை கட்டிட தொழிலாளி ராஜமாணிக்கம் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்ததாக பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அம்மாவாசை புகார் கொடுத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வினோதினி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக போஸ்கோ சட்டத்தின்கீழ் அந்தியூர், புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த தங்கவேல் மகன் கட்டிட தொழிலாளியான ராஜமாணிக்கம் (25) என்பவரை கைது செய்து சிறை காவலுக்கு அனுப்பி வைத்தார்.
ஈரோடு பவானி
செய்தியாளர் ஜி. கண்ணன்