கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டதுடன், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன் பிறகு விதிமுறைகளுடன் கூடிய தளர்வு ஏற்படுத்தப்பட்ட நிலையில், தேநீர் கடைகள் உணவகம் வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை திறக்கப்பட்டன. இந்த வகையில் இளைஞர்கள் தேகப்பயிற்சி செய்யும் உடற்பயிற்சி கூடங்களும் கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பவானி ரோட்டில் உள்ள ஏ எஸ் உடற்பயிற்சி கூடம் செயல்படத் துவங்கிய நிலையில், காலை மாலை என இரு வேளைகளிலும் இளைஞர்கள் தேகப்பயிற்சி செய்து வருகின்றனர்.
உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இளைஞர்கள் மட்டுமின்றி 40 வயதைக் கடந்தவர்கள் ஆர்வமாக உடற்பயிற்சி செய்து வருகின்றனர்.
இதுகுறித்து, உடற்பயிற்சி கூட ஆசிரியர் சங்கர் கூறும்போது, ஊரடங்கு உத்தரவு தளர்வு ஏற்படுத்தப்பட்ட பின், பயிற்சி செய்ய வரும் இளைஞர்களின் வருகை கணிசமாக இருந்தது. தற்போது, ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், இளைஞர்கள், 40 வயதை கடந்தவர்கள் ஆர்வத்துடன் பயிற்சி மேற்கொள்கின்றனர். முகக் கவசம் அணிதல், சனிடைசர் மூலம் கையை சுத்தப்படுத்துதல், சமூக இடைவெளி ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.
ஈரோடு அந்தியூர் செய்தியாளர் எஸ் திருபாலா.