திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மனைவியுடன் தகாத உறவில் ஈடுப்பட்ட நபரை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் என்பவரின் மனைவி அபிராமிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஸ் என்பவருக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நேற்று இரவு மணிகண்டனுக்கும் ராஜேசுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ராஜேஸின் வீட்டிற்றுச் சென்ற மணிகண்டன் ராஜேஸ் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். ராஜேசின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக ராஜேஸை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உமராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பத்தூர் செய்தியாளர் சுஜாதா