பொதுமக்கள் கூட்டமும் அலைமோதுகிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஜூலை மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு சாலைகள் வெரிச்சோடி காணப்பட்டன.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கம் தளர்வு செய்யப்பட்டதால் 8 வாரங்களுக்கு பின் மீண்டும் கோவையில் இயல்பு நிலை திரும்பியது.
இன்று கோவை உக்கடம் மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட், இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் வழக்கம் போல் இருந்தது. ஞாயிற்றுக் கிழமை பொது முடக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டாலும் வெளியில் வரும் பொதுமக்கள் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநாராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை நகர் பகுதி முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை செய்தியாளர் பிரசன்னா