தடைசெய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பின் தலைவர் பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ அமைப்பின் அதிகாரி என அந்நாட்டு உளவுப்பிரிவு வழங்கியுள்ள சான்று ஆவணம் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு காரணமான இயக்கம் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பு. இதனால் இந்த இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்திற்கு பாகிஸ்தான் அதரவு அளிப்பதாக இந்தியா பலமுறு குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் அவற்றை பாகிஸ்தான் மறுத்து வந்தது. இந்நிலையில் அந்த இயக்கத்தின் தலைவராக செய்பட்டு வரும் சையத் மொகமமு யூசுஃப் ஷா என்ற சையத் சலாஹூதின் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பின் அதிகாரி என அந்நாட்டு உளவுத்துறை அளித்துள்ள சான்று ஆவணம் வெளியாகியுள்ளது. அந்த ஆவணத்தில் அவர் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பில் உள்ளதும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2020 டிசம்பர் வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஆவணம் தற்போது வெளியாகியுள்ளது.
தொடர்ந்து இந்தியாவில் தீவிரவாத நடவடிக்கைகளை ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பு செயல்படுத்தி வரும் நிலையில் வடக்கு காஷ்மீர் பகுதிகளில் மீண்டும் வன்முறையை கட்டவிழ்க்கவும் தங்கள் நிலைகளை ஸ்திரப்படுத்தவும் அந்த அமைப்பு தீவிரம் காட்டி வருவதாக இந்திய ராணுவ அதிகாரிகள் கடந்த நேற்று குற்றம் சாட்டியிருந்தனர். இந்நிலையிவ் பாகிஸ்தானின் இரட்டை வேடம் வெளிப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சான்று ஆவணம் மூலம் ஐஎஸ்ஐ அமைப்பு தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் நடைபெற்றுள்ள பல்வேறு தாக்குதல் சம்பவங்களுக்கு பாகிஸ்தான் ராணுவமே காரணம் என்பது வெளிப்பட்டுள்ளதாகவும் இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-ராய்