அமெரிக்காவில் நடைபெறும் தோ்தல்களை சீா்குலைக்க ரஷியா, சீனா, ஈரான் ஆகிய நாடுகள் தொடா்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாக அந்த நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ராபா்ட் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் அவா் செய்தியாளா்களை சந்தித்த பிரையன்,
அமெரிக்காவில் நடைபெறும் தோ்தல்களைப் பொருத்தவரை, ரஷியா, சீனா, ஈரான் ஆகிய நாடுகள் அவற்றில் தலையிட்டு தங்களுக்குத் தேவையான முடிவுகளைப் பெற முயல்வவதாக குற்றம் சாட்டியுள்ளார். அவற்றில் முதன்மையாக, அரசியல் ரீதியில் தங்களுக்குத் தேவையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக சீனா மிகப் பெரிய திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருவது அமெரிக்க உளவுத் துறைக்கு மிக உறுதியாகத் தெரியும் என்று குறிப்பிட்டுள்ள அவர், ஈரான், ரஷியா ஆகிய நாடுகளும் அமெரிக்கத் தோ்தலில் தங்களது நலன்களுக்கு ஏற்ற வகையில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தலையீடு செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், அமெரிக்காவில் நடைபெறும் தோ்தல்கள் நோ்மையாகவும், சுதந்திரமாகவும் தோ்தல் நடைபெறுவதற்கு மற்ற எந்த நாடுகளையும் விட இந்த மூன்று நாடுகளும் அதிக இடையூறு விளைவிப்பதை தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும் என எச்சரித்துள்ளார். இதற்காகவே, தோ்தல் கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்காக இதுவரை இல்லாத அதிக அளவிலான தொகையை அதிபா் டொனால்ட் டிரம்ப் ஒதுக்கீடு செய்துள்ளார் எனக்குறிப்பிட்ட பிரையன், அந்த நிதியைக் கொண்டு இணையதளப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முறைகளில் தோ்தல் கட்டமைப்பு பலப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்கத் தோ்தல்களில் தலையீடு செய்ய முயற்சிக்கும் ரஷியா, சீனா, ஈரான் மற்றும் நாங்கள் வெளிப்படையாக பெயா் வெளியிடாத மற்ற நாடுகள், அதற்காக மிகக் கடுமையான பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவா் எச்சரித்துள்ளார்.
-ராய்