புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மேல்மங்களம் கிராமத்தில் மாமியார்-மருமகள் இடையே ஏற்பட்ட சொத்து தகராறில் மருமகள் மாமியாரை தாக்கி கத்தியால் கிழித்து ஆபத்தான நிலையில் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேல்மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் இராமன் பொட்டுமணி இவர்களுக்கு இரவிக்குமார், பாலசுப்பிரமணி,
திருமுர்த்தி என்ற 3 மகன்கள் உள்ளனர்.
இதில் இரவிக்குமார் என்பவர் இறந்து விட்டார் மற்ற இருவரும் வெளியூரில் வேலை பார்த்து வருகின்றனர்.
இராமன்
பொட்டுமணிக்கு சொந்தமான இடத்தில் அனைவரும் வசித்து வந்தனர் இந்நிலையில் தனதுமகன் பாலசுப்பிரமணி கலப்பு திருமணம் செய்தாதல் தனது சொத்தில் பாகம் பிரித்து கொடுத்துள்ளனர்.
அந்த வாய்பினை பயன்படுத்தி மருமகள் அருள்அமுதா முழு சொத்தையும் யாருக்கும் தெரியாமல் தனது பெயரில் மாற்றியுள்ளார்.
பொட்டுமணி தனது மற்றொரு மகனான திருமூர்த்திக்கு வீடு கட்டுவதற்க்கா கல்லை ஊன்றியுள்ளார் இதனால் மாமியார் பொட்டுமணிக்கும் மருமகள் அருள்அமுதாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் மருமகள் அருள்அமுதா மற்றும் அவரது இருமகள்கள் அவரதுதாயார் ஆகியோர் இணைந்து மாமியார் பொட்டுமணி இளையமருமகள் கலைமதி இருவரையும் கட்டையால் தாக்கி பின்னர் பொட்டுமணியை கத்தியால் கிழித்துள்ளனர்.
ஆபத்தானநிலையில் கிடந்த பொட்டுமணி, கலைமதி இருவரின் அலறல் சத்தம்கேட்டு அருகே இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து நாகுடி காவல் துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புதுக்கோட்டை செய்தியாளர் கிருஷ்ணமூர்த்தி