அந்தியூர் அடுத்த தவிட்டுப்பாளையம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த 31 வயது பெண்ணும், அவரது 5 மாத மகளும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.
பரிசோதனையில் இருவருக்கும் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து இருவரும் பவானி அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இருவரும் அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற, சின்னத்தம்பிபாளையம் அரசு மருத்துவர் சக்தி கிருஷ்ணன், அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்தார். மேலும் அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது.
ஈரோடு அந்தியூர் செய்தியாளர் எஸ் திருபாலா.