கோவை இடையர்பாளையம் பகுதியில் தேமுதிக நிறுவனர் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களையும் பொருளாளர் பிரேமலதா அவர்களையும் அவதூராக கார்ட்டூன் வெளியிட்ட பிரபல தினசரி நாளிதழ் தினமலர் பத்திரிகை கண்டித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கு என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு கழகம் தொடங்கிய முதல் விஜயகாந்த் அவர்களின் எண்ணம் படி விஜயகாந்த் மற்றும் பிரேமலதா அவர்களை அவதூறாக கார்ட்டூன் வெளியிட்ட பிரபல தினசரி நாளிதழ் தினமலர் பத்திரிகை கண்டித்து கோவை கவுண்டம்பாளையம் பகுதி கழக செயலாளர் ஆறுமுகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கோவை பகுதியில் தேமுதிக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கோஷங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், மற்றும் ஆர்ப்பாட்ட முடிவில் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் சண்முகவடிவேல், மற்றும் சரவணன், கருணாநிதி, சாய்ரா பானு, சிதம்பரம், ராஜி, ரவீந்திரன் சுதா வினோத் ,ராஜேந்திரன், சந்தனகுமார் ,ஆறுமுகம் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தினமலர் பத்திரிகை கண்டித்து கோவை துடியலூர் பகுதி செயலாளர் சரவண பாண்டியன் தலைமையில் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் ரங்கசாமி, ராஜேஷ், மைக்கல் முத்துகிருஷ்ணன், குட்டி, மனோஜ் பண்டியன் ,அன்பு, செந்தில் ,உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் மற்றும் துடியலூர் பகுதி சேர்ந்த தேமுதிக தொண்டர்கள் அனைவரும் இரண்டு மனுக்களை துடியலூர் காவல் நிலையத்தில் இன்று வழங்கப்பட்டது துடியலூர் காவல் ஆய்வாளர் மனுக்களை பெற்று தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
கோவை செய்தியாளர் பிரசன்னா