கோவை உக்கடம் சி.எம்.சி காலனியில் வசிக்கும் தூய்மை பணியாளர்களுக்கு மாற்று வீடு வழங்க குடிசை மாற்று வாரியம் பணம் கேட்டதால் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் உக்கடம்- ஆத்துப்பாலம் மேம்பாலப் பணி
இழுபறியாகிவருகிறது.
உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. ஆத்துப்பாலத்தில் இருந்து பாலத்தில் பயணிப்போர், உக்கடம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே பேரூர் ரோட்டில் திரும்பி, மீன் மார்க்கெட் முன் இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக டோபிக்கானா மற்றும் துாய்மை பணியாளர்கள் குடியிருப்பு, மீன் மார்க்கெட் மற்றும் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை காலி செய்ய வேண்டியிருக்கிறது.
சிஎம்சி காலனியில் வசிக்கும் பயனாளிகள் பட்டியில் தயாரித்து மாற்றிவிடு இலவசமாக வழங்கப்படும் அதுவரை வாடகை வீட்டில் வசிக்க வேண்டும் பொருளாதார வசதி இல்லாதவர்கள் கழிவுநீர் பண்ணை வளாகத்தில் செட் அமைத்து வசிக்கலாம் என உறுதி கூறப்பட்டது.
இச்சூழலில் உக்கடம் கழிவுநீர் பண்ணை வளாகத்தில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் கட்டும் வீடுகளை ஒதுக்க வேண்டும் எனில் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் ரூபாய் 42,000 செலுத்தவேண்டும். சி.எம்.சி காலனிலே கட்டப்படும் குடியிருப்புக்கு ரூபாய் 80,000 செலுத்த வேண்டுமென குடிசை மாற்று வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் தூய்மைப் பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் வீடுகளை காலி செய்யும் முடிவில் இருந்து வாங்கியுள்ளனர்.
நெடுஞ்சாலைத்துறை தரப்பிலேயே இறங்கு தளம் அமைக்க 5 தூண்கள் மட்டுமே கட்ட வேண்டும் அதற்கு தேவையான இடத்தில் உள்ள வீடுகளை மட்டும் இடித்து கொடுத்தால் போதும் அதற்கு உரிய இழப்பீடு தொகையை தருகிறோம் என்கின்றனர்.
நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சனை தொடர்வதால் ஆத்துப்பாலம் மேம்பாலப் பணி இப்போதைக்கு முடிவது போல் தோன்றவில்லை.
கோவை செய்தியாளர் பிரசன்னா