கொடைக்கானலில் துவங்கிய முன்பனி காலம் நட்சத்திர ஏரி அதன் சுற்று வட்டார பகுதியில் பனி போர்த்தியது போல் காணப்படுவதால் பொதுமக்களின் கண்களுக்கு விருந்தளித்து வருகிறது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வழக்கமாக டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை கடும் குளிரும் இதனால் ஏரிசாலை முழுவதும் பனி போர்தியது போல் காட்சி அளிக்கும் ஆனால் தற்போது முன்பனிகாலம் செப்டம்பர் மாதமே துவங்கி உள்ளது..
இந்த ஆண்டு கால நிலையின் மாற்றத்தின் காரணமாக மழையின் அளவும் குறைந்து காணப்பட்டது.. கடந்த மாதத்தில் அவ்வப்போது சாரல் மழையும் கனமழையும் மேகமூட்டங்களும் நிலவியதால் குளிர் குறைந்து காணப்பட்டது.. இதனால் முன் பனிகாலம் ஆரம்பித்த தற்போது
நட்சத்திர ஏரி அதன் சுற்று வட்டார பகுதியில் பனியும் , வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் மேக கூட்டங்களும் போர்த்தியது போல் காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வோருக்கு விருந்தளித்து வருகிறது. இதனால் ஏரிசாலை சுற்றி உள்ள பகுதிகளில் கடும் குளிரும் நிலவி வருகிறது.. குளிரையும் பனியையும் அனுபவிக்க வரும் சுற்றுலா பயணிகளின் வருகையின்றி ஏரிச்சாலை வெறிச்சோடி காணப்படுகிறது..
கொடைக்கானல் செய்தியாளர் அருண்